3/19/09

பெருந்தினை..!!!


வந்த போதேல்லாம் தந்தாயே முத்தம்...

உன் எச்சில் துடைத்த என்னிடம்

எனக்கு? என்றாய்...

கொடுத்தேன் உன் இடது கண்ணத்தில்,

இந்த பக்கம் என்று உன் வலது புறத்தை காட்டினாய்

இரண்டாவது முத்தம் கொடுக்கும் போது என் உதடோடு உன் முகத்தில் போட்ட பான்ட்ஸ் பவ்டரின் வாசனையும் ஒட்டிகொண்டது

மீண்டும் முத்த மழை பொழிந்தாய் - இம்முறை உதட்டில்

பிடித்தும் பிடகாதுமாய் சுவைத்தேன் உன் முத்தத்தை

கொடுக்கும் போது இட்ட சத்தத்தையும் தான்

மீண்டும் துடைத்தேன் உன் எச்சிலை

ஒட்டிகிச்சா என்றாய்?!!!

கிள்ளினாய்,

கடித்தாய்,

கிச்சு கிச்சு மூடினாய் கண்ணீர் வர சிரித்தேன்

அணைத்தாய் ஆசை தீற கொஞ்சினாய்

என்ன கல்யாணம் பண்ணிகிரியா?!! என்று கெஞ்சுனாய்

நீ கேட்பது புரியாமலியே செரி என்றேன்

கோவிலுக்கு சென்றோம்,

சினிமா பார்த்தோம்,

ஒரே ஸ்ட்ரா போட்டு இலநீர் குடித்தோம்...

உன் மடியிலேயே உறங்க இடம் கொடுத்தாய்

இரவில் உன் படுக்கைலேயே உன் மூச்சு காற்று என் காதில் படும் இடவெளியுலேயே உறங்கினோம்

தூக்கத்திலோ தெரிந்தோ தெரியாமலோ என் மீது கால் போட்டாய் (missed call??)

உன் இதையத்தின் லப் டப் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னை அனைத்து தூங்கினாய்

"நானும் உன்னை அனைத்தும் அனைக்காதவனாய் அனைத்தும் மறந்தவன் ஆனேன் " - நம் உறவின் நிஜம் உட்பட

காலையில் நீ குளிக்கும் பொது அம்மா, நான் குளிக்க போறேன் யாரும் வராம பாத்த்க்கோ என்று சொல்லிவிட்டு சுவரின் மேல் இருந்து உன்னை கண்டு கரைத்த காக்கையையும் விரட்டினாய்,

ஆனால் என்னை மட்டும் அருகில் அழைத்து உந்தன் முதுகு தேய்க்க சொன்னாய் அதன் வழ வழுப்பில் வழுக்கியது சோப்பு மட்டும் அல்ல என் மனதும் தான்

என் முன்னேயே உடை உடுத்தினாய், ஜாக்கெட்டீன் ஊக்கு போட சொன்னாய்

கண்ணத்தை கிள்ளினாய்

கள்ள சிரிப்பு சிரித்தாய்

எல்லாம் சரி,

பின் ஏன் என்னை மறந்து விட்டு இன்னொருத்தனை காதலித்து ஓடி போய் திருமணம் செய்து கொண்டாய் ???

1 comment:

Unknown said...
This comment has been removed by a blog administrator.