3/5/09

பூ திரைப்பட விமர்சனம்


Banner: Moserbaer, Nesagee Cinemas


Cast: Srikanth, Parvathy

Direction: Sasi


Music: S S Kumaran


My Rating:- 3.5/5

------------------------------------------------------------------

சில வருடங்களுக்கு முன்னால்.....என் வீட்டில் நடந்த காட்சி:-

நான் :-உங்களுக்கு புடிச்ச படம் என்னப்பா?

எங்கப்பா:- hmmm... ஆட்டோகிராப்

எங்கம்மா :- 'ஆட்டோகிராப்' ஆம்ல யாருக்கு தெரியும் உங்க அப்பனுக்கு எத்தன ஆட்டோகிராப் பட கத இருக்கோ?? ஆனடவனுக்கு தான் வெளிச்சம்

நான்: ஏன் உனக்கு இல்லயா மா?

எங்கம்மா: பதில் சொல்லாம போடனு சொல்லிட்டு துணி துவைக்க போய்ட்டாங்க...

என் கேள்விக்கான பதில் தான்??? இந்த பூ

என்ன? இந்த பூ'வுக்கும் நான் எங்கம்மா கிட்ட கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கு??

நான் கண்ட வரையில் பெரும்பாலும் திருமணமான என் தாய் வையது பெண்கள் தன் சிறுவையது ஆசைகளை வெளியே சொல்வது இல்லை காரணம் என்னவென்று தெரியவில்லை அவர்களுக்கும் ஓர் ஆட்டோகிராப் கதை இருந்துருக்க கூடும் குறைந்த பச்சம் ஒரு டூயட் கணவாவுது..! அதை பகிர்ந்துகொள்ளவோ இல்லை அஸைபோடவோ அவர்களுக்கு நல்ல நன்பிகள் கூட இருப்பது இல்லை

"இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்டோகிராப் படம் ஓட்டிகிட்டு இருந்த தியேட்டர் இப்போ ஒரு பொண்ணோட ஆட்டோகிராப் ஓடுது."

திருமணமான பிறகு பண்டிகைக்கு தன் பழைய காதலணை பார்க்க வந்து காத்து கடக்கும் காதலியிடம் தோழி கேட்கிறாள். ''நீ இன்னும் தங்கராசுவை மறக்கலியா?''.

கதா நாயகி சொல்லும் pathil ''நான் ஏன் மறக்கணும்?''.

ஆம் ஏன் மறக்கணும்? ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தன் முதல் காதலை நினைவில் வைக்க உரிமை உண்டு அல்லவா??

கதையில் வாழ்ந்து இருக்கும் கதா பத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பின் கதை இருக்கிறது ஒரு ஆசை இருக்கறது அதுக்கான நியாயமானக் காரணமும் இருக்கிறது.

கதைநாயகி பார்வதி தமிழுக்குக் கிடைத்திருக்கும் வரம் எனலாம் இந்த வருட சிறந்த நடிகைக்கான தேசிய விருது யாருக்கு ?? நான் கடவுள் பூஜாவுக்கா இல்ல பூ பார்வதிக்கானு பட்டி மன்றமே நடத்தலாம்

கதா நாயகன் ஸ்ரீகாந்த்த பாராட்டியே ஆகனும் இந்த மாதிரி ஒரு கதா நாயகி முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்ததிர்க்காக மத்தபடி தன் கதா பத்திரத்த நிறைவா செய்து இருக்கார்

ஸ்ரீகாந்த் அப்பாவா நடிச்சு இருக்கும் பேனாகாரர் மனசுல நிக்கிறார் வண்டி ஒற்றவரா வர அவரு "தன்ன பேனாகாரர்னு தான் எல்லோரும் சொல்லணும்னு எதிர் பாக்குரதும், சொல்லாட்டி அவர் கோவபடரதும் அந்த பேனாகாரர் பேர தனக்கான பெரிய கவுரவமா,விருத்த கருதும் ஒரு அற்ப சந்தோஷகாரா வாழ்ந்து இருக்கார்.

ஸ்ரீகாந்த் தன் அப்பா கிட்ட "கம்ப்யூட்டர் படிச்சி இருந்த தான்பா 30 ஆயுரம் 50 ஆயுரம் கடைக்கும். நான் படிச்சது மெக்கானிக்க்ல் Engineerனு சொல்லும் பொது சமுதாயத்தில் நிலவும் படிப்பை சார்ந்த தொழிலின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை காட்டுகிறது

கிளைமாக்ஸ்க்கு முன்னாடி காட்சியுள் வர ஒரு டயலாக் "உனக்கும் ஒரு ஆசை இருந்துச்சு..எனக்குள்ளயும் ஒரு ஆச இருந்துச்சு....ஆனா அந்த பொண்ணுக்கும் ஒரு ஆசை இருந்துருக்கும்னு தெரியாம போச்சேனு ஸ்ரீகாந்த் அப்பா மாறி கிட்ட சொல்ராறு

இது தான் வாழ்வியலின் நிதர்சனம் "நம்ம எல்லோரோடு ஆசையும் யாரோ ஒருத்தோரட ஆசைய தகர்த்து நிராசையாக்கிட்டு தான் நிறவேத்திக்குரோம்" என்பது வாழ்வியல் உண்மை பெரும்பாலும் அது நம்ம கண்களுக்கு தெரிவது இல்லை தெரியும் பொது காலத்த கடந்து வந்துவிடுகின்றோம்

கதை ச.தமிழ் செல்வன், இவர் எழுதிய "வெயுலோடு போய் விளையாடு" சிறு கதைய இயக்குனர் சசி ஒரு அற்புதமான சினிமாவாய் தமிழுக்கு வழங்கியிருக்கிறார் பின்னணி இசைக்காகவே ச ச குமரன் பாராட்டனும் ஒளிப்பதிவு ப க முத்தையா அவரும் அவர் பங்கை நிறைவா செய்து இருக்கார்

இந்த படத்த எல்லோரும் பாக்கணும் இது சொல்லும் செய்தி நம் தமிழர்களின் வாழ்வியல் மற்றும்... சமுதாய சூழல் சார்ந்தது.


டோன்ட் மிஸ் இட்

2 comments:

Saransiva said...

I saw film I liked this film very much but padam paakum pothu rombo perusa teriyala but nee sollum vitham wow!

miga arumaiya solli irukkurai

Santhosh said...

thx da