3/2/09

விடுதலைப் புலிகள்

உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு.

உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது ஆச்சரியமான விஷயம். தற்கொலைப்படை என்னும் ஆயுதத்தைக் கொண்டு இலங்கை, இந்திய அரசுகளின் முக்கியமான பல தலைவர்களை புலிகள் கொன்றுள்ளனர். பிற போராளி இயக்கங்கள் என்று எதுவுமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள், குழந்தைப் போராளிகளைப் படையில் வைத்திருப்பது, இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து மிரட்டிப் பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள்மீது.

ஆனாலும் ஈழத் தமிழர்கள் பலரும் இன்று விடுதலைப் புலிகளை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலையில் உள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தை உருவாக்கி இன்றுவரை நடத்திவரும் பிரபாகரன் என்ற மனிதர், இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி/இனப் போரின் பின்னணி, இந்தியாவின் தலையீடு எனப் பலவற்றையும் தொகுத்து புரியும் வகையில் எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம்.

- என்று புத்தகத்தின் பின் புறத்தில் அட்சு இட பட்டுள்ளது


Details
---------------------------------
Book Title Viduthalai Puligal
Pages 208
Format Printed Book
Year Published 2007
Price: Rs 100.00
---------------------------------

Author:- Marudhan

---------------------------------

i will post My review very soon..!!!


No comments: