4/1/09

உருபசி...விமர்சனம்

நான் என்னையே அதிகம் பார்த்தது கண்ணாடியில் தான் அது புறத்தினன காட்டுமே ஒழிய அகத்தினை அல்ல.

நாம் நம்மை கண்ணாடியுலும், தண்ணீரிலும், மற்றவர்களின் கண்களிலும் நம்புறத்தையே கண்டு பழக்கி கொண்டு.. நம் அகத்தை நேர் கொண்டு பார்க்க பயம் கொண்ட பேடிகள் ஆனோம், நம் அகத்தினை மற்றவர்கள்க்கு காட்டுவது இருக்கட்டும் நம்மையே நம்மால் பார்க்க இயலாது உன்மையில்... நாம் எவ்வளவு வெளி உலகத்திர்க்காக நம் நிஜ இயல்பை மாற்றி ஏமாத்துகிறோம் இல்லை... நம்மையே ஏமாற்றி கொள்கிறோம் என்று.

இந்த உருபசி என்ற புத்தகம் என்னனயே எனக்கு அறிமுக படுத்துகிறது... என் பல கேள்விகளை கேட்டும் விடை தராமலேயே மீண்டும் இன்னும் என்னூல் பல வினாக்களை எழப்பிட்டு செல்கிறது

கடவுள்..???

ஏன் பிறந்தோம்??

ஏன் இப்படி ஒரு பெற்றோர்கள்??

ஏன் நான் சிந்திப்பதை மற்றவர்கள் வேறு மாதிரி பார்க்கிறார்கள்?

ஏன் இப்படி ஒரு தண்டனை கல்வி கூடங்கள்??

ஏன் இந்த பகட்டு போலி வாழ்க்கை??

ஏன் இந்த அர்ப்ப திருமன வாழ்க்கை? வெரும் இன சேர்க்கைக்கா?

குடும்ப சிறை மனிதனை சிறைகைதியாக்குவது மட்டும் இன்றீ கடிவாலம் இட்ட குதிரையாகவும் மாற்றுகிறது....பணம் தான் பிரதானமா???

இப்பணத்திர்காகவா?? வாழ்க்கையின் பெரும் பகுதியை ஓடி வீன் அடிக்க வேண்டும்...

Survival of the Fittest என்றால் weakest சாக வேண்டியது தானா??

வாழவும் விடாத சாகவும் விடாத சிந்தனை தெளிவு இருந்து வாட்டுவது ஏன்??

வாழ்க்கை முழுவது வெரும் யாக்கையிலேயே வாழ்ந்து கொண்டு இறுக்கிறோம்

காலத்தில் பலர் தங்கள் சுய அடையாளங்களை இழந்து கரைந்துபோய்விடுகிறார்கள்...ஒவவொரு வரும் கணவு காண்கிறோம் அனால் எத்தனை பேரால் அதை நிஜம் ஆக்க முடிகிறது???

புத்தர், ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் ஆசை படாமல் வாழ்வது எத்தனை பெரிய அசை என்று அவறுக்கு ஏன் தெரியாமல் போனது???

தூக்கம் வராமல் என்னன் பற்றியும் இந்த புத்தகத்தில் வரும் சம்பத் அவனது நன்பர்கள்,உறவுகள் பற்றியும் யோசித்து கொண்டே இருக்கிறேன்...உருபசி சிந்தனை பசியாக என் மனதில் ஊறுகின்றது இப்போழுது என்னை நிம்மதி இழக்க வைத்து விட்டது

இந்த புத்தகம் என்னை போன்றோர்க்கு அக கண்ணாடி. உன்னை போன்றோர் என்றால்?? என்ன என்று கேட்கிறீர்களா?? புத்தகத்தை படித்து என்னை தெரிந்து கொள்ளுங்கள்

நிஜ என்'னை..!!!

இப்புத்தகத்தை வாங்க.. Click Here


No comments: