3/1/09

கடவுளுக்கு ஓர் கடிதம்...

மனிதனை படைத்த கடவுளுக்கு,
கடவுளை படைத்த மனிதன் எழுதுவது.....

நலம் நலமரிய ஆவல்...!!! என்று கேட்கமாட்டேன்....உங்கள் நலத்தைப்பற்றி சிந்திக்கும் அளவிற்க்கு மதப்பித்தன் இல்லை இந்த கடவுளின் கடவுளாகிய மனிதன்.
நலம்...!! நான் நலமா இல்லையா என்பது தங்களுக்கே தெரியும்,இருந்தாலும் ஞாபகபடுத்த இக்கடிதம் எழுதுகிறேன்

கடந்த வாரம் நடந்த வகுப்பு தேர்வில் நான் படித்ததும் வரவில்லை,எடுத்து சென்ற படித்திராததில் இருந்து, கிழித்ததில் இருந்தும் வரவில்லை..

இதனால் எனக்கு ஒரு நட்டமும் இல்லை தங்களுக்குத்தான் ஒரு தேங்காய்,இரண்டு வாழைபழம், மூன்று கொட்டைப்பாக்கு, நான்கு வெற்றிலை நட்டம்

ஆனால் வந்த தேர்வு முடிவால் எனக்கு வீட்டில் நல்ல...!!! அர்ச்சனை...!!!
மேலும் அப்பாவுக்கு அம்மா கொடுத்த காபியில்- அபிஷேகம் எனக்கு...!!!
பின்பு அம்மா வழக்கம்போல ஆராதனை..!!!
இது அனைத்தும் உனக்கு நடக்க வேண்டியவை.....!!!

நேற்றுதான் உன் "திருவிளையாடளை" East-Men் கலரில் TV'யில் பார்த்த்து.வியந்தேன்....இன்றும் உன் விளையாட்டுக்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது நேரில் நீ வாராமலேயே....

இடியாய், மழையாய், புயலாய்....பேர் அலையாய்....பூகம்பமாய் (வான்யியல் செய்திகள்!) உதையாய்...அடியாய்...திரு. நடராஜன் மூலம் எனக்கு...!!!! சந்தோஷம்....!!!


பின் குறிப்பு:- என் தந்தை பெயர் திரு. நடராஜன், என் பெயர் சந்தோஷ்....!!!!

No comments: